Machine Gun


இயந்திரத் துப்பாக்கி (machine gun) முழுத் தன்னியக்கம் கொண்டதும், நிலையாகப் பொருத்தப்பட்ட அல்லது இடத்துக்கிடம் எடுத்துச் செல்லத் தக்கதுமான ஒரு சுடுகலன் ஆகும். இது துப்பாக்கிக் குண்டுகளை விரைவாக, நிமிடத்துக்குப் பலநூறு குண்டுகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சுடுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகின்றது. முதல் இயந்திரத் துப்பாக்கி சர். ஹிராம் மக்சிம் என்பவரால் 1884 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது மக்சிம் துப்பாக்கி என அழைக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்கச் சட்டங்களின்படி முழுத்தன்னியக்கம் கொண்ட சுடுகலன்களும், பொதுவான சுடுகலன்களைத் தன்னியக்கம் கொண்டவையாக மாற்றக்கூடிய உதிரிப்பாகம் அல்லது கூறுகளும் இயந்திரத் துப்பாக்கிகளாகக் கருதப்படுகின்றன.

இயந்திரத் துப்பாக்கிகள் பொதுவாக துணை இயந்திரத் துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள், தன்னியக்கப் பீரங்கிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. துணை இயந்திரத் துப்பாக்கிகள்கைத்துப்பாக்கிகளுக்கான குண்டுகளையும், இயந்திரத் துப்பாக்கிகள் ரைபிள் களுக்கான குண்டுகளையும் பயன்படுத்துகின்றன. இயந்திரத் துப்பாக்கிக்கும், தன்னியக்கப் பீரங்கிகளுக்கும் இடையிலான வேறுபாடு “கலிபர்” எனப் பொதுவாக அழைக்கப்படும் துப்பாக்கிக் குளாயின் உள் விட்ட அளவால் தீர்மானிக்கப்படுகிறது. தன்னியக்கப் பீரங்கிகள் 15 மில்லிமீட்டருக்கு மேற்பட்ட குளாய் உள் விட்டம் கொண்டவை.

Advertisements

Tell us Your Suggestion

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s